|
அளவற்ற
அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... |
Home |
|
Upload
Date : 27-01-2009 |
|
கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா?
(திருக்குர்ஆன் ஏசுவை கடவுள் என்கிறது என்று அவதூறு பரப்பிய
உண்மையடியானுக்கு மறுப்பு)
பாகம்- 2
பொய்யடியானின் பொய் கூற்று 2
// குர்ஆனின் 3:36 கூற்றுப்படி ஏசு
சாத்தானை விட்டும் பாதுகாக்கப்பட்டவர். ஏசுவின் தாயார் மர்யம்
அவர்கள் ஏசுவை பெற்ற காரணத்திற்காக அவரும் பாதுகாக்கப்பட்டார்.
எனவே ஏசு கடவுள் //
நமது விளக்கம்:-
|
திருக்குர்ஆனின் 3ம்
அத்தியாயம் ஆலஇம்ரானின் வசனங்கள் 35,36,37 வது வசனங்கள் |
|
 |
|
3:35. இம்ரானின் மனைவி
''என் இரைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும்
அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்;. எனவே
(இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ
யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும்
இருக்கின்றாய்'' என்று கூறியதையும். |
|
 |
|
3:36. (பின், தான்
எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப்
பெற்றதும்; ''என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே
பெற்றிருக்கின்றேன்'' எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்;.
அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்;. ஆண், பெண்ணைப்
போலல்ல. (மேலும் அந்தத்தாய் சொன்னாள்;) ''அவளுக்கு மர்யம்
என்று பெயரிட்டுள்ளேன்;. இன்னும் அவளையும், அவள்
சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து
காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன். |
|
 |
|
3:37. அவளுடைய இறைவன்
அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்;.
அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்;. அதனை
வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி
செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும்
அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக்
கண்டார், ''மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து
வந்தது?'' என்று அவர் கேட்டார்; ''இது அல்லாஹ்விடமிருந்து
கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக்
கணக்கின்றி உணவளிக்கின்றான்'' என்று அவள்(பதில்) கூறினாள்.
|
மேற்கண்ட வசனத்தொடர்களில் 3:36
வது வசனத்தை மட்டும் படித்துவிட்டு திருவாளர் உண்மையடியான்
மர்யம் (அலை) அவர்கள் ஏசுவை பெற்ற
காரணத்திற்காக அவரும் பாதுகாக்கப்பட்டார் என்று அன்னை
மர்யம் (அலை) அவர்களை தரம்தாழ்த்தி எழுதியுள்ளார்.
முஸ்லிம்களைப்
பொருத்தவரையில் அவ்விருவருமே சங்கைக்குரியவர்கள்,
மரியாதைக்குரியவர்கள் என்று ஏற்கனவே எழுதிவிட்டோம். இன்னும்
ஒருபடி மேலே சொன்னால் அன்னை மரியம் (அலை) அவர்களை முஸ்லிம்களின்
முன்மாதிரி என்று திருக்குர்ஆனில் (பார்க்க 66:12) இறைவன்
பறைசாற்றுகிறான். முஸ்லிம்களிடத்தில் அன்னை மரியம் (அலை)
அவர்களுக்கு தவிர்க்க இயலாத தனிப்பெரும் இடமிருக்கிறது. (விரிவாக
அறிந்து கொள்ள ஸூரா மர்யம் என்ற பெயரிலுள்ள திருமறை குர்ஆனின் 19
அத்தியாயத்தை படித்துப் பாருங்கள்.)
ஆனால் பொய்யடியானோ
மர்யம் (அலை) அவர்கள் ஏசுவை பெற்ற
காரணத்திற்காகவே அவரும் பாதுகாக்கப்பட்டார் என்கிறார்.
இதற்கு ஆதாரம் எங்கிருந்து இவருக்குக் கிடைத்தது என்று நமக்குத்
தெரியவில்லை.
பொய்யடியான் தவறாக விளங்கிய அதே
வசனம்; (3:36), இம்ரானின் மனைவியும், மர்யம் (அலை) அவர்
தாயருமாகிய அந்த பெண்மணி ''அவளுக்கு
மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்;. இன்னும் அவளையும், அவள்
சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்குகளிலிருந்து
காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்'' என்று
இறைவனிடம் பிராத்தித்ததாகக் கூறுகிறது. அந்த பிராத்தனையை இறைவன்
ஏற்றுக் கொண்டதாகவும் அதற்கு அடுத்த வசனம் (3:37)
தெளிவுபடுத்துகிறது. எனவே மர்யம் (அலை) மற்றும் நபி ஈஸா (அலை)
ஆகிய இருவர்களுமே ஷைத்தானின் தீண்டுதலிருந்து
பாதுகாக்கப்பட்டவர்கள், காரணம் அவர்களுடை தாயார் கேட்ட பிராத்தனை
என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
ஏசுவை பெற்ற
காரணத்திற்காகவே மர்யம் பாதுகாக்கப்பட்டார் என்பதில்
பொய்யடியானுக்கு உறுதியிருந்தால், குர்ஆன் ஏசுவை கடவுள் என்கிறது
என்பதை அவரால் நிரூபிக்க முடியுமென்றால் இதையே தலைப்பாக வைத்து
நம்முடன் ஒரே மேடையில் விவாதிக்க வரட்டும். இவரோடு நேரடி
விவாதத்திற்கு இஸ்லாமிய இணையப்பேரவை என்றும் தயார் என்பதை நாம்
என்றோ அறிவித்துவிட்டோம். நம் விவாத அழைப்பைக் கண்டு பின்னங்கால்
பிடரியில் அடிபட ஓடிஒழிந்த பொய்யடியானின் சரித்திர சாதனையை
நீங்களும் அறிவீர்கள். இந்நிலையில் ஏசுதான் கடவுள் என்ற
தலைப்பில் விவாதிக்கவாவது உண்மையடியானுக்கும் அவரது
கூட்டாளிகளுக்கும் தைரியம் இருக்கிறதா? (அது எங்கே
இருக்கப்போகிறது?)
பொய்யடியானின் பொய் கூற்று 3
//ஆனால் இத்தகைய பாதுகாப்பு
முஹம்மதுக்கு நபிக்கு இல்லை. குர்ஆன் 48:2 வது வசனத்தின் மூலம்
முஹம்மது நபி பாவம் செய்வதற்கு அல்லாஹ்வே அனுமதி
(License)
கொடுக்கிறாhன். எனவே அவர் பெரும் பாவங்களை செய்தார்.//
நமது
விளக்கம்:-
திருவாளர் உண்மையடியான் அல்லாஹ்வின் இறுதித்தூரர் முஹம்மது (ஸல்)
அவர்கள் மீது இரண்டு அவதூறுகளை அள்ளிவீசுகிறார். அவைகள்
1)நபி (ஸல்) அவர்களுக்கு ஷைத்தானின்
தீண்டுதலிலிருந்து பாதுகாப்பு இல்லை
2)நபி பாவம் செய்வதற்கு அல்லாஹ்வே அனுமதி
(License)
கொடுக்கிறான்.
எனவே அவர் பெரும் பாவங்களை செய்தார். என்பதாகும்
|
 |
|
மேற்கண்ட ஹதீஸின் தமிழ்
மொழிபெயர்ப்பு |
|
'நிச்சயமாக, உங்களில் ஒவ்வொருவருக்கும்
ஒரு ஷைத்தான் அவருடன் இருக்கும் சகாவாகவும், ஒரு வானவரை
அவருடன் இருக்கும் சகாவாகவும் சாட்டப்படாமலில்லை. என்று
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினர். 'நாயகமே! தங்களுக்குமா?
(அவ்விதம் சாட்டப்பட்டிருக்கிறது)' என்று தோழர்கள்
வினவினர். 'ஆம்' எனக்கும் தான். ஆனால் நிச்சயமாக, அல்லாஹ்
(எனக்குப் பேரருள் புரிந்து) என்னை அவன் மீது மிகைக்கச்
செய்துள்ளான். எனவே அவன் இஸ்லாமாகி நன்மையைத் தவிர வேறு
எதனையும் எனக்கு ஏவுவதில்லை' என்று அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினர்.'
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரழி)
ஆதாரம்: முஸ்லிம். |
|
இது சம்மந்தமாக வரும்
மற்றொரு ஹதீஸ் |
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஓரிரவு
என்னிடமிருந்து புறப்பட்டுவிட்டனர். அப்பொழுது அவர்கள்
மீது எனக்கு உரோஷம் பொத்துக்கொண்டு வந்தது – அவர்கள் தம்
மனைவியரில் எவரிடமாவது சென்றிருக்கக்கூடும் என்பதனால்.
பின்னர் அவர்கள் வந்தார்கள். அப்பொழுது நான் செய்த
வேலையைப் பார்த்துவிட்டு, 'உமக்கு உரோஷம் பிறந்துவிட்டதா?'
என்று வினவினர். அதற்கு நான், 'என் போன்றவள் தங்களைப்
போன்றவர்கள் மீது உரோஷம் கொள்ளாமல் இருக்க முடியுமா?'
என்று வினவினேன். அப்பொழுது அவர்கள், 'உம்முடைய ஷைத்தான்
உம்மிடம் நிச்சயமாக வந்துவிட்டான்' என்று கூறினர்.
'என்னோடு ஷைத்தான் இருக்கிறானா?' என்று கேட்டேன். 'ஒவ்வொரு
மனிதரிடமும் ஷைத்தான் இருக்கவே செய்கிறான்' என்று அவர்கள்
கூறினார்கள். 'தங்களுடனுமா?' என்று நான் கேட்டேன். 'ஆம்;;'
எனினும் அல்லாஹ் என்னை அவன் மீது மிகைக்கச்
செய்திருக்கிறான். எனவே அவன் எனக்குக்
கீழ்ப்படிந்துவிட்டான்' என்று கூறினர்.''
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரழி)
ஆதாரம்: முஸ்லிம், நஸயீ |
அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
ஷைத்தானின் தீண்டுதல் மற்றும் சூழ்ச்சிகளை விட்டும்
முழுபாதுகாப்பைப் பெற்றவர்கள் என்பதை விளக்கத் துவங்கினால்
இக்கட்டுரை முடிவுக்கு வராது. பல புத்தகங்களாக வெளியிடவேண்டிய
அளவிற்கு செய்திகளைக் கொண்ட தலைப்பு இது. உண்மையடியானின் போலி
முகத்திரையை கிழித்தெறிவதற்காக இரண்டு ஹதீஸ்களை மட்டும் இங்கு
எடுத்தாளுகிறோம்.
மேற்கண்ட ஹதீஸ்களை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு வானவரும், ஒரு ஷைத்தானும்
இருக்கிறான். இருப்பினும் நபி (ஸல்) அவர்களிடமிருந்த ஷைத்தானை
வல்ல இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்பட வைத்துவிட்டான்.
மேலும் அந்த ஷைத்தானை மிகைக்கும் சக்தியை வல்ல அல்லாஹ் நபி (ஸல்)
அவர்களுக்கு வழங்கியுள்ளான் என்பதும் தெளிவு. எனவே அவன்
நன்மையைத் தவிர வேறு எதனையும் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்க
இயலாது. இதற்குமேல் இந்த ஹதீஸ்களை விளக்கவேண்டிய அவசியமில்லை
என்று நினைக்கிறோம்.
ஒவ்வொரு மனிதனும் அவரை தாய் பெற்றெடுக்கும்போது ஷைத்தான்
தீண்டுகிறான், மர்யமையும், அவர் புதல்வரையும் தவிர என்று கூறிய
நபி பெருமானர்; (ஸல்) அவர்கள்தாம் தனக்குள்ள பாதுகாப்பைப்
பற்றியும் தெரிவிக்கிறார்கள். எனவே நபி ஈஸா (அலை) அவர்களைப்
பற்றி வந்த அந்த ஹதீஸை தூக்கிப்பிடிக்கும் உண்மையடியான், நபி
(ஸல்) அவர்களைப் பற்றிவரும் இவ்விரு ஹதீஸ்களையும் நம்பித்தான்
ஆகவேண்டும், தவிர்க்க இயலாது.
2)
நபி (ஸல்) பாவம் செய்வதற்கு அல்லாஹ் அனுமதி
(License)
கொடுத்தானா?
யாருக்கு? யார்?
License
கொடுத்திருக்கிறார் என்பது இத்தலைப்பின் இறுதியில் புரியும்.
மக்களே! 21ம் நூற்றாண்டின் ஈடு
இணையற்ற மெண்டல் என்ற பட்டம் வழங்குவதாக இருந்தால், அதை
உண்மையடியானைத் தவிர வேறு எவருக்கும் வழங்க இயலாது. அப்பட்டத்தை
உண்மையடியானைத் தவிர வேறு எவரும் பெற்றிடவும் இயலாது.
இவ்வுலகில் வாழும் 160 கோடி
முஸ்லிம்களும் தங்களுக்கு வழிகாட்டியாக நம்பும் ஒரு மனிதப்
புனிதரை விமர்ச்சிக்க வேண்டுமென்றால், குறைபட்சம் சப்பைகட்டுகள்
கட்டி விவாதிக்கும் அளவிற்குள்ள ஆதாரங்களாவது இவர்
அளிக்கவேண்டும். நபி (ஸல்) பாவம்
செய்வதற்கு அல்லாஹ்வே அனுமதி (License)
கொடுத்தான் என்கிறார். கொஞ்சம்கூட அறிவுக்கும் இவருக்கும்
சம்மந்தமில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார் இந்த
உண்மையடியான். இதற்குத்தான் இவருக்கு டாஸ்மார்க் பொய்யடியான்
என்ற பட்டம் கிடைத்திருக்கிறது. இனி என்னென்ன பட்டங்களை எல்லாம்
வாங்கிக் குவிக்க இருக்கிறாரோ தெரியவில்லை.
|
திருக்குர்ஆனின்
48வது அத்தியாயம் Fபதஹ்ஹின் 2து
வசனம் |
|
 |
| 48:2.
உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும்
அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி
செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும். |
மேற்கண்ட குர்ஆன் வசனத்தைத்தான்
ஆய்வுசெய்கிறேன் பேர்வழி என்று படித்துவிட்டு இப்படியொரு
அபத்தக்கருத்தை அள்ளி வீசியுள்ளார். மேற்கண்ட கண்ட அந்த
வசனத்திலேயே (வ
யஹ்தியக ஸிராத்தம் முஸ்தகீமா) உம்மை நேரான வழியில்
நடத்துவதற்காகவும் என்று வந்துள்ளதை இவர் திட்டமிட்டு
மறைப்பதின் உள்நோக்கம் என்ன?
தன்னுடைய அடிமைகளின் பாவங்களை
மன்னிப்பதும், அல்லது தண்டிப்பதும் எஜமானான அல்லாஹ்வின்
தனிப்பெரும் அதிகாரமாகும். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி நபி
(ஸல்) அவர்களுடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ்
மன்னித்துவிட்டதாக சொன்னால், பாவம் செய்ய அல்லாஹ்வே நபிகளுக்கு
அனுமதி வழங்குவதாக பொருள் கொள்ள முடியுமா? இது சர்வசித்தனான வல்ல
இறைவனின் மீதே இட்டுக்கட்டிய பெரும் அவதூறு இல்லையா?
நபி
பாவம் செய்வதற்கு அல்லாஹ்வே அனுமதி
(License)
கொடுக்கிறான். எனவே அவர் பெரும் பாவங்களை செய்தார்
என்று அவதூறாக எழுதியுள்ள உண்மையடியான், தன் தவறை உணர்ந்து,
வருந்தி பாவமீட்சி பெறவில்லையெனில் அதற்கான கூலியை மறுமையில்
வாங்கிக்கொள்வார், வசமாக மாட்டிக்கொள்வார்.
உண்மையடியான் தன் கூற்றில் உண்மையாளராக இருந்தால் இதையாவது
தலைப்பாக வைத்து நம்மோடு பகிரங்க நேரடி விவாதத்திற்கு
தயாராகட்டும். அந்த விவாதத்தில் நபிகள் செய்த பாவங்களை
ஒவ்வொன்றாக நம்முன்னர் பட்டியலிடட்டும். இறைவன் நபிகளாருக்கு
கொடுத்ததாகக் கூறும்
(License)
அனுமதியையும் மறக்காமல் கொண்டுவந்து தரட்டும். அவர்
எடுத்துவைக்கும் சொத்தை வாதங்கள் ஒவ்வொன்றுக்கும், அவருடைய
குறுக்கை நொருக்கும் அளவிற்கு நாம் பதில் கூறுவோம் இன்ஷா
அல்லாஹ்.
நண்பர்களே! நம்முடைய அனுபவத்தில்
பல்வேறு கிருஸ்தவ பெருமக்களோடு உரையாடியிருக்கிறோம்,
விவாதித்திருக்கிறோம். இன்றும் கூட இஸ்லாத்தை விமர்ச்சிக்கும் பல
கிருஸ்தவகளிடம் தொடர்போடு இருக்கிறோம். இஸ்லாத்தை விமர்சிக்கும்
எவரும் உண்மையடியான் என்ற புனைப் பெயரில் உலாவரும் இந்த
தறுதலையின் அளவிற்கு விஷமத்தனமான போக்கில் விமர்சித்ததில்லை.
நமக்கு ஆரம்பம் முதலே
இவர் மீது சந்தேகம் உள்ளது. நமது தேசபிதா காந்தியை சுட்டுக்
கொன்ற தேசதுரோகி கோட்சே, காந்தியடிகளை கொலைசெய்யும் முன் தன்
கையில் இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரை பச்சை குத்திக்கொண்டான்.
காரணம் கொலைப்பழியை முஸ்லிம்களின் மீது போடுவதற்காக. அதே
சங்பாரிவார பாணியில்
இந்தத் தறுதலையும், முஸ்லிம்-கிருஸ்தவர்களிடையே நிலவும் பரஸ்பர
நட்பை சீர்குழைக்க, கிருஸ்தவர்களின் லேபிலில் இஸ்லாத்தை
விமர்ச்சிக்கிறதோ என்றும் நாங்கள் கருதுகிறோம். காரணம் ஒரு
கிருஸ்தவரிடம் இருக்கவேண்டிய பைபிளைப் பற்றிய குறைந்த பட்ச
அறிவுகூட இந்த தறுதலைக்கு இல்லாதது நம் சந்தேகத்திற்கு மேலும்
வலுசேர்க்கிறது.
ஷைத்தான் யாரைத்
தீண்டியிருக்கிறானோ இல்லையோ, உண்மையடியானை உடும்புப் பிடியாக
பிடித்துள்ளான் என்பது மட்டும் மறுக்க இயலாத உண்மை.
இஸ்லாத்திற்கு எதிரான
கயமைத்தனமான இவரின் போக்கு, ஷைத்தானின் நேரடி ஏஜண்டாக இவர்
மாறிவிட்டதை காட்டுகிறது. இவர் இஸ்லாத்தை விமர்சிப்பதாக
நினைத்துக் கொண்டு அவதூறுகள் பல பரப்பி தனது பாவங்களின் கணக்கில்
பெருமளவு வரவு வைத்துள்ளார்.ஒருவேளை இஸ்லாத்திற்கெதிராக
பொய்களையும், அவதூகளையும் வெளியிட்டு, பெரும் பாவங்கள்
செய்வதற்கு ஷைத்தானிடமிருந்து விஷேஷ அனுமதி
(Special License)
வாங்கியிருப்பாரோ? பெரும் பாவங்கள் செய்வதற்கு யாருக்கு? யார்?
License
கொடுத்திருக்கிறார் என்பதை தற்போது அறிந்து கொண்டீர்களா
நண்பர்களே?
அதிரடிகள்
தொடரும் இன்ஷா அல்லாஹ்....
தொடர்புடைய
பதிவுகள் :-
|