குர்ஆன் ஏசுவை கடவுளாக சித்தரிக்கின்றது (?) என்ற பொய்யான தகவலை உண்மையடியான் ஒலிப்பதிவு மூலம் பரப்பினார். அந்த அவதூறை உடனடியாக நீக்குமாறும், இல்லையெனில் மிகுந்த கேவலத்தை அவர் சந்திப்பார் என்றும் நாம் ஏற்கனவே எச்சரித்திருந்தோம். அதை நீக்குவதற்கு இவருக்கு கால அவகாசம் கூட கொடுத்திருந்தோம். தன் தவறை திருத்திக் கொள்ளாது இஸ்லாத்திற்கெதிராக பொய்களைப் பரப்புவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார் இவர். எதையும் பொருட்படுத்தாத இந்த தறுதலையின் பொய்களுக்கும், இஸ்லாத்திற்கெதிரான அவதூறுகளுக்கும் தொடர்ந்து பதிலடிகள் கொடுக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.    உன்மையடியான் என்ற போலி லேபிலில் உலாவரும் இந்த அயோக்கியனின் முகத்திரையை கிழித்தெறியும் எங்கள் பணி என்றும்போல் தொடரும் இன்ஷா அல்லாஹ். இதே தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அபத்தங்கள் அனைத்திற்கும் வரிக்குவரி விலாச இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். பல பாகங்களில் வெளிவர இருக்கும் நமது பதில்களின் முதல் பகுதியே இது.
இஸ்லாத்தை அழித்திடத் துடிப்பவர்களுக்கு எதிராக, இஸ்லாமிய இணையப் பேரவையின் பகிரங்க விவாத அறைகூவல்களை பார்வையிட கீழுள்ள தொடுப்பை சொடுக்கவும்.

பகிரங்க விவாத அழைப்பு !!!

 

 

  :: Font Tips ::

Site Fonts : Lathaa Unicode Font and Arial Unicode MS.

Browser Setup : Click View--Then Select Encoding--More--Unicode (UTF- 8).

பிற இணையங்கள்

 இதுதான் இஸ்லாம்
 சத்திய மார்க்கம்
 அபூமுஹை
 ஏகத்துவம்
 தமிழில் குர்ஆன்
 குர்ஆன் சாப்ட்வேர்
 இஸ்லாம் கல்வி
 இஸ்லாமிய தஃவா
 A1 ரியலிஸம்
 ஒற்றுமை
 ஆன்லைன் பீஜே
 தமுமுக
 முஸ்லிம் மீடியா
 J A Q H
 அந்நஜாத்
 சமரசம்
 முஸ்லிம் திரட்டி
ரீட் இஸ்லாம்
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

Home

  Upload Date : 24-01-2009

 

கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா?
(திருக்குர்ஆன் ஏசுவை கடவுள் என்கிறது என்று அவதூறு பரப்பிய உண்மையடியானுக்கு மறுப்பு)
பாகம் -1

இவ்வுலகைப் படைத்து பரிபாலிக்கும் சர்வ சித்தனான அல்லாஹ்வை மறுத்து, அவனது திருத்தூதர்களின் ஒருவரான மாண்புமிகு நபி ஈஸா (அலை) அவர்களை கடவுளாக சித்தரித்து, முக்கடவுள் கொள்கை என்னும் மாபெரும் வழிகேட்டில் உள்ளவர்களே கிருஸ்தவர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. பவுலின் கற்பனையை மதமாக்கி, மனித சிந்தனையில் உதித்த அசிங்களையும், கூளம் குப்பைகளையும் வேதம் என்று தம் கைப்பட எழுதிவைத்துக் கொண்டு கிஸ்தவமே உண்மையான மதம் என்று ஒப்பாரி வைப்பது காலம்காலமாக நடந்துகொண்டே வருகிறது.

இந்நிலையில் நாற்றமெடுத்து நாறிக்கொண்டிருக்கும் கிருஸ்தவ (மதக் ?) கோட்பாட்டை தூக்கிப்பிடிக்க ஒருவர் கிளம்பியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை உண்மையடியான் என்ற லேபிளில் உலாவரும் டாஸ்மார்க் பொய்யடியான்தான். இறையளித்த இஸ்லாத்தை கொச்சைபடுத்தியும், பரிசுத்த வேதமாம் திருக்குர்ஆனை தொடர்ந்து அவமதித்தும் வரும் இந்த ஆசாமி சில மாதங்களுக்கு முன்னர் குர்ஆன் ஏசுவை கடவுள் என்று சொல்கிறது என பொய்யான தலைப்பில் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தை அவன் இவன் என்று ஒருமை நடையில் பேசி அதை பதிவு செய்து தனது வலைப்பூவில் வெளியிட்டுள்ளார்.

'நரகத்தின் படுபாதாளத்திற்கு நான் சென்றே தீருவேன், முஸ்லிம்களாகிய நீங்கள் என்னை நேர்வழிபடுத்திட முடியுமோ?' என்று சவால் விடுவதுபோல, ஆய்வு என நினைத்துக் கொண்டு இணையத்தில் தொடர்ந்து உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார் இந்த உண்மையடியான்.

அவ்வாறான உளறல்களின் வரிசையில், நபி ஈஸா (அலை) அவர்களை கடவுள் என்று குர்ஆனையும் ஹதீஸையும் வைத்து நிரூபிக்கின்றேன் பாருங்கள் என்று சூளுரைத்த இவர், தன் தலையில் தானே மண்ணை வாரிபோட்டதுபோல் இந்த உலகத்தில் (இதுவரை வாழ்ந்து மரணித்த, இனி வாழ இருக்கின்ற) இன்று வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய முஸ்லிம்கள் அனைவரும் கிருஸ்தவர்களுக்கு கடவுள்கள் என்று ஆய்வு செய்திருக்கிறார். இதென்னவேடிக்கை என்கிறீர்களா? ஆக்கத்தை தொடர்ந்து படியுங்கள், இறுதியில் புரியும். அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாத்தை பொய்யாக்க முனைபவர்களை வல்ல அல்லாஹ் இப்படித்தான் இழிவுபடுத்துவான் போலும்.

இஸ்லாத்தை பொய்யாக்குகிறேன் பாருங்கள் என்று பலமுறை அவதாறமெடுத்து இறுதியில் முஸ்லிம்களின் பதில்களால் மூக்கறுபட்டு, பல இழிவுகளையும் சந்தித்தவர்தான் இந்த பொய்யடியான். இவரைப் பற்றி எழுதி காலத்தை வீணடிக்காமல் இவரின் அண்டப்புழுகல்களின், ஆகாசப்புழுகல்களின் விளக்கத்திற்கு வருவோம்.

பொய்யடியானின் பொய் கூற்று 1

//உலகில் பிறக்கும் குழந்தைகள் அனைவரையும் சாத்தான் தீண்டுவான், அதனேலேயே பிறந்த குழந்தை அழுகின்றன என்பது இஸ்லாமிய நம்பிக்கை. ஏசுவைத்தவிர உலகத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளும் சாத்தானால் தீண்டப்படும் என்பது நபி மொழி. எனவே ஏசு பரிசுத்தமானவர், மற்றவர்களெல்லாம் சாத்தானால் தீண்டப்பட்டவர்கள். ஆகையால் ஏசு கடவுள். //
 

நமது விளக்கம்:-
 

மேற்கண்ட ஹதீஸின் தமிழ் மொழிபெயர்ப்பு

புதிதாகப் பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைக் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். (ஆனால்) மர்யமையும் அவருடைய புதல்வரையும் தவிர! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹூரைரா (ரழி) அவர்கள் சொன்னார்கள். பிறகு அபூ ஹூரைரா (ரழி) அவர்கள் நீங்கள் விரும்பினால், இந்தக்குழந்தையையும் இதன் வழித்தோன்றல்களையும் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து காக்குமாறு உன்னிடம் நான் வேண்டுகிறறேன் (என இம்ரானின் துணைவியார் இறைவனை வேண்டினார்) எனும் 3:36 வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (புகாரி 4548)

இன்னுமொரு அறிவிப்பில்-ஒவ்வொரு மனிதனையும் அவர் தாய் பெற்றெடுக்கும்போது அவரை ஷைத்தான் தீண்டுகிறான், மர்யமையும், அவர் புதல்வரையும் தவிர எனக் கூறப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக வரும் மற்றொரு ஹதீஸ்

'ஆதம் (அலை) அவர்களின் வழித் தோன்றல்களில் எந்தக் குழந்தையும் பிறக்கும் பொழுது ஷைத்தான் அதனைக் கிள்ளாமலில்லை. எனவே அவன் அதனைக் கிள்ளி விடுவதன் காரணமாக, அது அழுது கத்துகிறது – ஆனால் மர்யமும் அவர்களின் மகனாரும் தவிர, (எல்லாக் குழந்தைகளும் பிறக்கும் பொழுது அவற்றை ஷைத்தான் கிள்ளி விடுவதன் காரணமாக அழுது கத்துகின்றன') என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினர்.'
அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரழி) ஆதாரம்:புகாரி,முஸ்லிம்,அஹ்மத்.

அன்பிற்குரியவர்களே! மேற்கண்ட ஹதீஸை அரைகுறையாக படித்துவிட்டு திருவாளர் உண்மையடியான் ஏசுவை கடவுளாக இஸ்லாம் கூறுகிறது என்கிறார். திருவாளர் உண்மையடியானின் கருத்துப்படி ஏசுவை ஷைத்தான் தீண்டவில்லை அதனால் அவர் கடவுள் என்றால், ஷைத்தான் மர்யம் (அலை) அவர்களையும்தான் தீண்டவில்லை என்று அந்த ஹதீஸ் கூறுகிறது. அதனால் திருவாளரின் லாஜிக்படி அன்னை மர்யம் (அலை) அவர்களையும் கடவுள் என்று அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். எனவே இவர் மர்யமையும் கடவுள்தான் என்கிறாரா? (சொன்னாலும் சொல்வார்).

அதுமட்டுமல்லாது (உண்மையடியானின் நம்பிக்கைபடி) ஏசு என்ற கடவுளை பெற்றெடுத்த (லேட்டஸ்ட் கடவுளான) மர்யம் (அலை) அவர்களுடைய தாயாரையும் சேர்த்தே இவர் வணங்கவேண்டும். ஏனெனில் வாரிசு அடிப்படையில் உண்மையடியானுக்கு இரண்டு கடவுள்களை கொடுத்த மர்யம் (அலை)அவர்களின் தாயார்தான் கடவுளுக்கெல்லாம் கடவுள்.

மேலும் ஏசுமட்டும்தான் பரிசுத்தமானவர், ஷைத்தானின் தூண்டுதலுக்கு அப்பாற்பட்டவர் என்கிறார் உண்மையடியான். அப்படியானால் இவ்வுலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களும், யூதர்களும், கிருஸ்தவர்களும், தீர்க்கதரிசிகள் என்று விசுவாசிக்கும் நோவா, டேவிட், ஆப்ரஹாம், ஐசக், இஸ்மவேல், மோஸே (அவர்கள் அனைவர் மீதுமும் இறைசாந்தி என்றும் நிலவட்டுமாக) போன்ற இறைத்தூதர்களின் நிலை என்ன? இவர்களைப் பற்றி உண்மையடியான் என்ன சொல்ல வருகிறார்? அவர்களெல்லாம் ஷைத்தானால் வழிகெடுக்கப்பட்டவர்கள் என்கிறாரா? (நவ்வூதுபில்லாஹ்).

மக்களே! உண்மையடியானின் லாஜிக் எப்படியெல்லாம் உதைக்கிறது, எங்கே போய் முடிகிறது என்பதை பார்த்தீர்களா? இவ்வாறு உளறிக் கொண்டிருப்பதை இனியும் இவர் நிறுத்தவில்லையெனில், அட ஞான சூனியமே! உந்தன் மறுபெயர்தான் உண்மையடியானோ!! என்று கிருஸ்தவ மக்களே இவர் முகத்தில் காரி உமிழ்ந்து, இவரை செருப்பால் அடித்து விரட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

சரி மேற்கண்ட ஹதீஸின் விளக்கத்திற்கு வருவோம். இந்த ஹதீஸில் ஷைத்தான் குழந்தையை தீண்டுவது என்றால் என்ன என்பதை சற்று நிதானமாக சிந்தித்தால் அந்த ஹதீஸை மிகத் தெளிவாக விளங்கலாம்.

1-பிறப்பு என்பது- அக்குழந்தை பிறந்து முதலாவதாக இடும் சப்தத்தை குறிக்கிறது என்பதை (مولود يولد) பிறக்கும் வேளையில் என்ற நபியவர்களின் வார்த்தை குறிப்பிடுகிறது.

2-தீண்டுதல் என்றால் ஷைத்தானால் வழிகெடுக்கப்படுவது என்று பொருளல்ல. பிறந்த குழந்தையை அவன் எப்படி வழிகெடுக்க இயலும்?. தீண்டுதல் என்றால் ஷைத்தான் தன் கரத்தினால் அக்குழந்தையின்; மீது அடித்து 'இவர் என் கட்சிக்காரர் அவர்களை நான் வழி கெடுப்பேன்' என்று கூறுவான். அக்குழந்தையை அவன் பிற்காலத்தில் தன் வலையில் வீழ்த்த முயற்சிப்பான் என்ற குறிப்பு இந்த ஹதீஸில் காணப்படவில்லை, என்றாலும் அவன் மக்களை (தற்போது உண்மையடியான் வழிகெட்டு இருப்பது போல) வழிகெடுக்க முயற்சிப்பான் என்று பிற திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் வாயிலாக நாம் விளங்க முடிகிறது. ஆக தீண்டுதல் என்பது கிள்ளிவிடுவது, அடிப்பது என்ற பொருளைத் தருகிறது.

3-மர்யமையும் அவருடைய புதல்வரையும் தவிர, என்றால் ஷைத்தான் அவ்விருவரையும் தீண்டுவதற்கு சென்றான், ஆனால் அவனால் அது முடியாமல் போய்விட்டது (மர்யம் (அலை) அவர்கள் தாயின் பிராத்தனைதான் அதற்குக் காரணம் என்பதை பின்னர் விரிவாக விளக்குவோம்). அதே போன்று உண்மை விசுவாசிகளையும் ஷைத்தானால்; தீண்ட முடியாது. நபிமார்கள் மற்றும் இறைநம்பிக்கை கொண்ட முஸ்லிம்களின் பாதுகாப்புத் தன்மையில் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் மேற்கண்ட நபிமொழி அமையவில்லை. ஏனெனில் உண்மையான இறைவிசுவாசிகளை ஷைத்தானால் வழிகெடுக்க முடியாது என்று அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.

15:42. ''நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர'' என்று கூறினான்.

16:99. எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக ஷைத்தானுக்கு எவ்வித அதிகாரமுமில்லை.

ஆகவே ஷைத்தானின் தீண்டுதல் இறைநம்பிக்கை கொண்ட முஃமின்களை எதுவும் செய்து விடமுடியாது.

4-''பிறக்கும் குழந்தை எதுவாயினும்'', ''எந்தக் குழந்தையும் பிறக்கும் பொழுது'' என்ற சொற்றொடர்கள்;, பொதுவாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தீண்டுதல் என்பதை ஷைத்தான் வழிகேடு என்று பொருள் கொண்டால், நோவா, டேவிட், ஆப்ரஹாம், ஐசக், இஸ்மவேல், மோஸே (அவர்கள் அனைவர் மீதுமும் இறைசாந்தி என்றும் நிலவட்டுமாக) உட்பட அனைத்து நபிமார்களும், நல்லோர்களும் ஷைத்தானின் வழிகேட்டிலிருந்து இருந்து தப்பிக்க முடியாது என்ற பொருள் வரும். அவ்வாறு இல்லையெனில் ஏசு மற்றும் மர்யம் இவ்இவ்விருவர் மட்டுமே வழிகேட்டிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் என்ற கருத்து அடிப்பட்டுப் போய்விட்டது. எனவே இந்த ஹதீஸில் ஷைத்தானின் தீண்டுதல் என்பதை ஷைத்தானின் வழிகேடு என்ற பொருளில் குறிப்பிடப்படவில்லை என்பதை அறியலாம்.

இதுபோன்று மோலோட்டமாக ஆய்வுசெய்தால் பலபேரை நாம் வழிகெட்டவர்கள் என்று சொல்லி விடலாம்.உதாரணமாக
 

38:41. ''மேலும் (நபியோ) நமது அடியார் ஐயூபை நினைவு கூறுவீராக! அவர் தன் இரட்சகனை அழைத்துப் பிரார்த்தனை செய்து நிச்சயமாக என்னை ஷைத்தான் துன்பத்தையும், வேதனையையும் கொண்டு தீண்டிவிட்டான்'' (என்று கூறியபோது அதற்கு நாம்)....

என்று திருக்குர்ஆனின் மற்றொரு வசனம் கூறுகிறது. நபி ஐயூப் (அலை) அவர்களை ஷைத்தான் தீண்டினான் என்றால் அவர்கள் வழிகெட்டுவிட்டார்கள் என்று பொருளல்ல.

கிருஸ்தவ நண்பர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வது என்னவெனில், முஸ்லிம்களாகிய நாங்கள் அன்னை மர்யம் (அலை) முதல் இறைத்தூதர் நபி ஈஸா (அலை) அவர்கள் உட்பட இவ்வுலகில் தோன்றிய அனைத்து தீர்க்கதரிசிகளையும் புனிதமானவர்களாகவே கருதுகிறோம். ஷைத்தானின் கெடுதல்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட பரிசுத்தவான்களாக அவர்கள் அனைவரையும் விசுவாசங்கொள்கிறோம். திருக்குர்ஆனின் வசனமான 3:36 வசனமோ, மேற்கண்ட ஹதீஸோ இல்லாவிட்டாலும் முஸ்லிம்களாகிய நாங்கள் அன்னை மர்யம் (அலை) அவர்களையும், நபி ஈஸா (அலை) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களையும் இறைவனால் பாதுகாக்கப்பட்ட பரிசுத்தவான்களாக உறுதியாக நம்புவோம் என்பதையும் பதிவுசெய்கிறோம்.

ஆனால் இதே நேரத்தில் இன்னுமொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது நபி ஈஸா (அலை) அவர்களை ஷைத்தான் சுமார் 40 நாட்கள் சோதித்திருக்கிறான் என்று பைபிள் கூறுகிறது (பார்க்க மத்தேயு 4 1-11). ஷைத்தான் ஏசுவை ஆக்கிரமித்திருக்கிறான் என்பதை பைபிளின் வார்த்தைகளே (அதாவது மலையில் அவரை ஏற்றி இருக்கிறது என்ற வாசகம்) சான்றுகளாக இருக்கிறது. ஏசு ஷைத்தானின் ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிக்கவில்லை என்று பைபிள் கூறுகிறது, ஆனால் குர்ஆனோ அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள் என்று கூறுகிறது. இவற்றில் எதை உண்மையடியான் போன்றோர் நம்பப்போகிறார்கள்? கிருஸ்தவர்களுக்கு ஏசுமீது உண்மையாக அக்கரையிருந்தால் பைபிளை குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு புனிதக் குர்ஆனை பற்றிப்பிடுத்து இஸ்லாத்தில் இணைவார்களாக!

குறிப்பு :- குர்ஆன் ஏசுவை கடவுளாக சித்தரிக்கின்றது என்ற பொய்யான தகவலை உண்மையடியான் ஒலிப்பதிவு மூலம் பரப்பினார். அதை உடனடியாக நீக்குமாறும், இல்லையெனில் மிகுந்த கேவலத்தை அவர் சந்திப்பார் என்றும் நாம் ஏற்கனவே எச்சரித்திருந்தோம். அதை நீக்குவதற்கு இவருக்கு கால அவசாகம் கூட கொடுத்திருந்தோம். எதையும் பொருட்படுத்தாத இந்த தறுதலையின் பொய்களையும், இஸ்லாத்திற்கெதிரான அவதூறுகளையும் கிழித்தெறியும் எங்கள் பணி என்றும்போல் தொடரும் இன்ஷா அல்லாஹ். இதே தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அபத்தங்கள் அனைத்திற்கும் வரிக்குவரி விலாச இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். பல பாகங்களில் வெளிவர இருக்கும் இவ்வாக்கங்களை படித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அதிரடிகள் தொடரும் இன்ஷா அல்லாஹ்....

 

கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா?  பாகம் -2

கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா? பாகம் -3

தொடர்புடைய பதிவுகள் :-

Copy Right ©  Islamiya Inayap Peravai. All Rights Reserved